இதோ சில டிப்ஸ்கள்!
* த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைக் சுற்றி எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கழுவிட்டு, த்ரெட்டிங் செய்தால்…புருவம் வில் போல் அழகான வடிவத்துக்கு மாறிவிடும்.
*த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது தசையெல்லாம் சுருங்கக் கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டுதான் செய்வார்கள். முதன் முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன், வலியும்,வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஒரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய்,ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறைவதோடு, கண்களையும் அழகாகக் காட்டும்.
* சில பெண்களுக்கு இரு புருவத்துக்குமிடையே முடி சேர்ந்து ‘கூட்டுப் புருவம்’ என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால்கூட அழகாகத் தெரியாது. இந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற… கஸ்தூரி மஞ்சள்தூள், கிழங்கு மஞ்சள்தூள், கடலை மாவு ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்டாக்குங்கள். இதை மூக்கில் நுனி பகுதியில் இருந்து புருவம் வரை ‘திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒத்தி எடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து முகம் பளிச்சென பிரகாசமாக தெரியும்.
1 comment:
பகிர்விற்கு நன்றி...
Post a Comment