வறண்ட சருமத்திற்கு :
இந்த வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு எல்லாக் காலங்களும் பிரச்சனைதான். வருடம் 365 நாளும் குளித்ததும் எண்ணை அல்லது மாய்ச்சுரைசர் உபயோகப்படுத்தியே ஆகவேண்டும். இனிமே அது பற்றிய கவலை வேண்டாம்! நீங்க குளிக்கிற தண்ணியில பேக்கிங் சோடா கலந்து குளிச்சுப் பாருங்க. பேக்கிங் சோடா ஒரு நல்ல மாய்ச்சுரைசர். அல்லது ரோஸ் ஆயில் ஒரு பத்து சொட்டுகள் கலந்து குளிக்கலாம். இந்த ரோஸ் ஆயில் நம் தோலிற்குத் தேவையான தண்ணீரைக் காயவிடாமல் ஈரப்பதத்துடனே வைத்திருக்க உதவுகிறது. குளித்ததும் நாம் போட்டுக் கொள்கிற வாசனைத் திரவியம் எல்லாம் தேவையில்லை. இதுவே ஒரு சென்ட்தானே.
டிப்ஸ்: ஆயிலும் தண்ணியும் எப்பவும் நல்லாக் கலக்காது இல்லையா? அதனால கொஞ்சமா அதுல பாலைக் கலந்தீங்கன்னா நல்லா மிக்ஸ் ஆயிடும்!
எண்ணைப் பசை சருமத்திற்கு :
உங்க வீட்டுல ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம் வாங்கி வைச்சது லேசா அழுகிடுச்சா? தூக்கிப் போட்றாதீங்க! குளிக்கிற தண்ணில சிட்ரிக் ஆசிட் அதிகமா உள்ள பழங்களான எலுமிச்சை , ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கலந்து குளிச்சுப் பாருங்க. இந்த சிட்ரிக் ஆசிட் பாக்டீரியாக்களைக் கொல்வதோடு, அழுக்கை அகற்றி, தோலில் உள்ள தேவைக்கு அதிகமான எண்ணையையும் உறிஞ்சிக் கொள்கிறது. நல்ல நறுமணமாகவும் இருக்கும். அதனால இனிமே எண்ணைப் பசை சருமத்துக்கு குட்பை சொல்லிட வேண்டியதுதானே!
No comments:
Post a Comment