என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

இளமையாக... அழகாக... ஆரோக்கியமாக இருக்க

அனைவருக்குமே தாம் எப்போதும் இளமையாக... அழகாக... ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு கனவாகவே இருக்கும். சரி... இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்...

ரொம்ப ஈஸி..! தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பழகுங்கள். எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பிறகு அரை மணி நேரம் யோகாசனம் செய்யுங்கள். மிகவும் எளிதான... உங்களுக்குத் தெரிந்த யோகாசனம் செய்தால் போதும்.


காலை 8 மணிக்குள் ஆவியில் வேகவைத்த உணவை சாப்பிடுங்கள். பின்னர் 11 மணிக்கு ஏதாவது ஒருவகை கீரை சூப் சாப்பிடுங்கள். மதியம் 12 முதல் ஒரு மணிக்குள் மதிய உணவு சாப்பிடுங்கள். கொஞ்சம் சாதம், நிறைய காய்கறி என்று சாப்பிட்டால் போதும்.


மாலை 5 மணிக்கு அரை மணி நேரம் உங்களுக்கு தெரிந்த யோகாசனம் செய்யுங்கள். அதன் பின்னர் 6 மணிக்கு கொஞ்சம் வேகவைத்த நிலக்கடலை சாப்பிடுங்கள். இரவு 8 மணிக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிடுங்கள்.


இதுவே உங்களுடைய இளமை மெனு! தினமும் கண்களுக்கு கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் அழகாக இருக்கும். இரவில் வெள்ளரிக்காயை எடுத்து, வட்டமாக நறுக்கி கண்களை மூடி இமைகளுக்கு மேல் வைத்து தூங்கவும்.


காலையில் எழுந்தவுடன், கண்களை நன்றாகத் திறந்து விழிகளை மேலும் கீழும், சுற்றிலும் உருட்டி பயிற்சி எடுக்க வேண்டும். பின்னர் கண்களைச் சுற்றி கொஞ்சம் விளக்கெண்ணையை தடவிவிடவும். இதை தினந்தோறும் செய்து வந்தால் கண்கள் பொலிவுடன் அழகாக இருக்கும்.


கரிசலாங்கண்ணி இலையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாகும். தினமும் தேங்காய் எண்ணையை விரல்களுக்கும், நகங்களுக்கும் வைத்து மசாஜ் செய்யவும். வாரத்திற்கு மூன்று முறை, வெந்நீரில் உடம்பிற்கு போடும் சோப்பை கொஞ்சம் கரைத்து, அதில் கை, கால் விரல்களை 15 நிமிடம் ஊற வைத்து சுத்தம் செய்யவும்.


தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடவும். குறிப்பாக மாதுளை, திராட்சை, சீத்தாப்பழம், ஆப்பிள், மங்கூஸ், ஆரஞ்சு ஆகியவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடவும். நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்த முடியும்.


வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் பொலிவு கூடும். தினமும் காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...