தேவையான பொருட்கள்:
- மைதா மாவு - 200 கிராம்
- சர்க்கரை - 40 கிராம்
- வெண்ணெய் - 120 கிராம்
- முட்டை - 1
- பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
- உப்பு - அரை தேக்கரண்டி
- பால் - 2 தேக்கரண்டி
டாப்பிங் செய்ய தேவையானவை:
- வெண்ணெய் - 65 கிராம்
- சர்க்கரை 50 கிராம்
- பொடித்த முந்திரி - 60 கிராம்
- வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
- பால் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
- வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
- முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடிக்கவும்.
- பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும். பேகிங் பவுடரையும், மைதா மாவையும் இரு முறை சலித்த பிறகு அதையும் சேர்க்கவும்.
- பிறகு இந்த கலவையில் சிறிது பால் சேர்த்து தளர்த்தியாக கலக்கவும். நிரம்ப தளர்த்தியாக இருக்கக் கூடாது.
- 9 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.
- கலவையை தட்டில் சமமாகப் போடவும்.
- பிறகு கேக்கின் மேலே கீழே கொடுத்துள்ளபடி "டாப்பிங்" செய்யவும்.
- டாப்பிங் செய்யும் முறை
- முதலில் வெண்ணையை உருக்கவும்.
- சர்க்கரை, முந்திரி (பொடித்தது), எசன்ஸ், பால் சேர்க்கவும்.
- ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளவும்.
- ஆறின பிறகு அதை பேக் ஆகாத கேக்கின் மேல் மெதுவாக தடவி, பிறகு 400 டிகிரி F சூட்டில் சுமார் 40 நிமிடம் வரை கேக்கை பேக் செய்யவும்.
No comments:
Post a Comment