என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பருக்களைப் போக்க சில யோசனைகள்:

  • கொழுப்பு அதிகம் உள்ள பொருள்கள், அசைவம், எண்ணெய் பொருள்கள் போன்றவற்றை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • சோப்புக்குப் பதிலாகப் பச்சைப் பயிறு மாவைத்,கடலை  மாவு தேய்த்துக் குளிக்கலாம்.
  • குளிக்கும் நீரில் வேப்பிலைகளைப் போட்டுக் குளித்தாலும் கிருமிகளைத் தவிர்க்கலாம்.
  • எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்களுக்கே முகப்பரு வரும். அடிக்கடி குளிர்ந்த நீரால் முகத்தைத் துடைத்துக்கொள்வது நல்லது.
  • மலச்சிக்கல் இருந்தாலும் பருக்கள் வரும். அதனால் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • முகத்தில் தோன்றும் பருக்களை ஒரு போதும் கிள்ளாதீர்கள். இது முகத்தில் வடுக்களை ஏற்படுத்துவதோடு பருக்களை மேலும் அதிகரிக்க வழி செய்கிறது.
  • தூசு நிறைந்த பகுதியில் வாகனத்தில் செல்ல நேர்ந்தால் முகத்தை மெல்லிய பருத்தித் துணியால் மூடிக்கொள்ளுங்கள்.
  • கஸ்தூரி மஞ்சள், நன்னாரி வேர், எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், பயத்தம் மாவு, கடலை மாவு, சீயக்காய் ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொண்டு சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்துவது நல்ல பலனை அளிக்கும்.
  • மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து வாங்கி மட்டுமே பூச வேண்டும்.

மேனி பளபளப்பு பெற இதோ சில டிப்ஸ்

1.மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி5 கிராம் அளவு  1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி  பளபளக்க தொடங்கும்

2.இரவில் படுக்கப்போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர மேனி ஜொலிக்க தொடங்கும்

3.அவரி இலையை சுத்தம்  செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் பளபளக்கும்

4.ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பொலிவு பெரும.

5.கோரைக் கிழங்கு பொடியை சாப்பிட்டு வர உடம்பில் பொலிவு உண்டாகும்.

6.அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் தேனில் சேர்த்து பருகிவர உடலழகும் முக அழகும் கூடும்.

7.முருங்கை பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வந்தால்  உடல் வனப்பு உண்டாகும்

சிவப்பு நிறப் பழங்கள்

கண்ணைக் கவரும் பழங்கள்தான் சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை.

ஆப்பிள்,பிளம்ஸ்,செவ்வாழை,மாதுளம்பழம்,இலந்தை,செர்ரி,போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.

வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.

மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

மஷ்ரூம் கட்லெட்

தேவையான பொருட்கள்
வேகவைத்து மசித்த உருளை 4
பெரிய வெங்காயம் நறுக்கியது 1/2 கப்
பிரட் கிரம்ஸ் 1 கப்
எண்ணெய் பொறிக்க
மைதா 1/4 கப்
பட்டன் மஷ்ரூம் 1 கப்
பச்சைமிளகாய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
கார்ன் பிளவர் 2 டே.ஸ்பூன்
தண்ணீர் மைதாவை கரைக்க

செய்முறை
 வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி நறுக்கிய காளான் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மசித்த உருளை சேர்த்து வதக்கவும். கார்ன் பிளவர் சேர்த்து பிரட்டி இறக்கவும். ஆற வைத்து மஷ்ரூம் வடிவத்தில் கட்லெட் செய்து மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.

கழுத்து மினுமினுப்பாக சில டிப்ஸ்

பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் - இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.

பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.


கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.


குளிப்பதற்கு10 நிமிடத்திற்கு முன்  தேங்காய் எண்ணெயை சிறிது பூசி கழுத்துபகுதியில்   மசாஜ் செய்து குளித்து வர கழுத்துபகுதியில் உள்ள கருப்பு  மறைந்து கழுத்து மினுமினுக்க தொடங்கும்

பொடுகு வராமல் தடுக்க:


வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

வேப்பிலை - 2 கைப்பிடி நல்ல மிளகு - 15-20 இரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை குளித்தால் பொடுகுகில் இருந்து முடியை காப்பாற்றலாம்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

 நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.

தேங்காய் பால் - 1/2 கப் எலுமிச்சை சாறு - 4 டீ ஸ்பூன் வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.

இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.

கன்னங்கள் குழிவிழுவதற்கு காரணம்

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின்மையும் ஒரு காரணம்.

மது, புகை, போதை போன்ற தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு கன்னங்கள் எளிதில் குழிவிழுந்துவிடும்

கன்னக் குழிகளை மாற்றி முகத்தை பொலிவாக்க தினமும் காலையில் எழுந்து பல்துலக்கிவிட்டு 1/2 லிட்டர் அளவு தண்ர் அருந்த வேண்டும். பின் சிறிது தூரம் நடைப்பயிற்சி, யோகா, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

பப்பாளிப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.

காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பின் வாய் நிறைய நீரை வைத்துக்கொண்டு சிறிது நேரம் வாய் கொப்பளித்தால் கன்னங்கள் விரிவடைய தொடங்கும் இப்படி தொடர்ந்து செய்து வர கன்னக்குழி  மறைந்து  முகம் மொழுமொழுவென்று இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...