ஒவ்வொருவருக்கும் கண் என்பது மிக மிக முக்கிய உறுப்பாகும். எனவே கண்களை நாம் அதிக கவனத்துடன் கவனித்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒருவரின் முக அழகு அவர்களின் கண்களைப் பொறுத்தே அமையும். எனவே அழகான கண் அமைவது நம் முகத்துக்கு மேலும் மெருகூட்டுகிறது. கண்களின் ஆரோக்கியமே அழகை மேம்படுத்துகிறது. கோடை கால உஷ்ணத்தால் சிலருக்கு கண்கள் சிவந்து காணப்படும். எனவே வெளியில் சென்று வந்தவுடன் கண்களையும், முகத்தையும் சுத்தமான குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். அத்துடன் நன்றாக தூங்கவேண்டும். அதிக நேரம் டி,வி பார்த்தல்,புத்தகம் வாசித்தல் போன்றவையும் கண்ணுக்கு கெடுதல் தரும். அதிக மேக்கப் கண்ணிற்கு போடுவதை தவிர்க்கவும். தூங்கச்செல்லும்முன் மேக்கப்பை கலைத்து விடவும். கவலைகளை விட்டு மனதை இலேசாக வைத்துக்கொண்டால் கண்கள் பளிச்சிடும்.
No comments:
Post a Comment