கொக்கீஸ்
தேவையான பொருட்கள்
அரிசி மா - 1 கிலோ
தேங்காய் பால் - தேவையான அளவு
முட்டை - 2
சீனி - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மரக்கறிஎண்ணெய் -1/2 போத்தல்
செய்முறை
அரிசி மா,தேங்காய் பால்,சீனி,முட்டை,உப்பு,மஞ்சள்
இவை அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில்
போட்டு தோசைக்கு கரைப்பது போல கரைத்து வைத்து
கொள்க. பிறகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊ ற்றவும்
எண்ணெய் நன்றாக கொதித்ததும் கொக்கீஸ் அச்சினை
கொதித்த எண்ணையில் முக்கி பின் அந்த அச்சினை
கரைத்து வைத்துள்ள மாவில் அடிப்பாகம்- மட்டும் படும்
படி முக்கி மீண்டும் கொதித்த எண்ணையில் போட்டு பொரித்தெடுக்க.
2 comments:
பகிர்வுக்கு நன்றி
எங்க அம்மா கொக்கிஸ் போட மாட்டங்க, ஏன்னா எதாவது சிறப்புநாள் என்றால் என் நண்பன் வீட்டில் இருந்து வந்து விடும் இந்த கொக்கீஸ்....
இப்ப மாற்றலாகி பல இடங்கள் மாறுவதால் கொக்கீஸ் நினைப்பே இல்லாமல் இருந்தது. நீங்க திரும்பவும் நினைவு படுத்தி விட்டீங்க.
Post a Comment