திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன் வீட்டில் செய்ய கூடியவை
எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தினமும் செய்து வந்தால் உங்களது முகம் பளிச்சிடும்.
வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்.
கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது..
நோர்மல் ஸ்கின் நாமக்கட்டி பவுடர், முல்தானிமுட்டி இரண்டையும் முகத்தில் பூசி கழுவ வேண்டும். எண்ணெய்ச் சருமம் என் றால் முல்தானிமுட்டி மட்டும் பூச வேண்டும். அழகு நிலையத்தில் இதற்காக ''ஸ்கின் லைட்னிங் பேக்கேஜ்'' உள்ளது. இதனை சருமத்திற்கு 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.
சாத்துக் குடி ஜூசை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். சந்தனப் பவுடரை பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்களில் கழுவவேண்டும். தினமும் இவ்வாறு செய்தால் ஒரு வாரத்தில் முகத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து விடும்.
No comments:
Post a Comment