என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பீட்ரூட்டின் பயன்கள்


பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி 
நீங்கும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில்
தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் 
உற்பத்தியாகும்.


தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றைத் தடவ தீப்புண்
கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட 
இடங்களில் கழுவி வர அரிப்பு மாறும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை, இரத்த சோகையை
குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட 
காயத்தில் பூசிவர புண் ஆறும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து 
சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர 
அனைத்தும் குணமாகும்.

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% 
கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும்,
8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, 
மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், 
கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், 
வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் 
போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் 
ஏ அதிகமாக உள்ளது.

வயிறு சம்மந்தமான நோய்களும் அதற்கான தீர்வுகளும்

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில்
குடிக்க வயிற்று வலி நீங்கும்.

வயிற்றுக்கடுப்பு நீங்க
1. வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க
வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
2. வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை
சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும் .

வயிற்றுப் பூச்சி வெளியேற
மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து
தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.

வயிற்றுப் போக்கு
சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப்
பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை
சாப்பிட்டால் எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும்
நின்றுவிடும்.
தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து
அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி,
வயிற்றுப் போக்கு நிற்கும்.

மலச்சிக்கல் நீங்க:-
1. மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிட வேண்டும்.
2. அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்த
மலச்சிக்கல் நீங்கும்
3. செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும்
இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

அஜீரணம்
1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம்,
மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி
குடிக்க அஜீரணம் சரியாகும்.
2. வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
பசியும் எடுக்கும். ஆனால் வெந்நீரில் குளிக்க வேண்டாம்.
நரம்புக் கோளாறுகள் ஏற்படும்! தினமும் வெந்நீரில்
குளிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் சொல்கின்றனர்!

 நாடாப்புழு வெளியேற
கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரைத் தட்டிப்
போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் 1/2 கப் உட்கொண்டு வர
வயிற்றிலுள்ள  புழுக்கள் வெளியேறும்.

சீதபேதி
1. கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்­ர்விட்டு,
அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த
கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம்
எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம்
மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
2. சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து
கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச்
செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை
வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும்
கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.
3. மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச்
சாப்பிட சீதபேதி குணமாகும்.



வாய் சம்மந்தமான நோய்களுக்கு சில ஆலோசனைகள்

வாய்ப்புண் தீர :-
மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து
வரவும்

நாக்குப்புண் தீர :-
இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பவும்.

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை
உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் :-
அகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வரவும்

வாய் நாற்றம் அகல:-
நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால்
பேசும் போது வெளிப்படும் வாய் நாற்றம் அகலும்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை
ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து
வந்தால் வாய் நாற்றம் போகும்.

எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து
காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல்
நிற்கும்.

பல்லில் பூச்சிகள் 
சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின்
எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

வெண்மையான பற்களைப் பெற...
வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும்
சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப்
போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க
வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத்
தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும்
ஈறுகளும் வலுவடையும்.

வலுவான பற்கள்
வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல
ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி,
பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு
சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும்
சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு
உறுதியாக இருக்கும்.

பித்தம் தணிய
கறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம்
தணியும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி,
அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி
வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

வியர்க்குரு நீங்க:-

1 வியர்க்குரு,தோல் தடிப்பு நீங்க பனை நுங்கு சதையை
வியர்க்குரு உள்ள இடங்களில் தடவ வேண்டும்.

2 வியர்வை, பூஞ்சை கிருமியால் ஏற்படும் சொறி, 

சிரங்கு,படை நீங்க வேப்பங்கொழுந்து, குப்பைமேனி 
இலையை அரைத்து தடவலாம்

3 சந்தனத்தைக் கொண்டு வியர்க்குரு உள்ள இடத்தில்

தேய்க்க பலன் தரும்.


4 நிறைய வியர்க்குரு வந்து அவதிப்படுபவர்கள் சாதம்
வடித்த கஞ்சியை தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிய
பிறகு குளித்தால் வியர்க்குரு மறையும்.


5 வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள்
தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு 
முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு 
மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

6 வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின்

சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை 
பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் 
ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

7.சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் 
கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு
இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் 
குணமாகும்.

தலை வலி குணமாக சில வழிகள்

1.விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.

2.தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.

3.நல்லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். 

4.ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் ‌சிறிது ஜீரக‌த்தை‌ப் போ‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி எடுக்கவும். பின்னர் அ‌ந்த எ‌ண்ணெ‌யை தலை‌யி‌ல் தே‌‌ய்‌த்து ‌‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து தலை கு‌‌ளி‌த்தா‌ல்,பி‌த்த‌த்தா‌ல் உ‌ண்டாகு‌ம் தலை சு‌ற்ற‌ல், தலைவ‌லி குணமாகும்.

5.ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
6.கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, குணமாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...