காது வலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு துழாவுவார்கள். இது மிகவும் தவறு. இதனால் காதுக்குள் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளி காதில் விட காது வலி, இரைச்சல், காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.
3-5 துளி நல்லெண்ணையில் ஒரு கிராம்பை சூடு செய்து அந்த எண்ணெயை வலி உள்ள காதில் இட்டால் விரைவில் வலி குறையும்.
மருதாணி வேரை நசுக்கிப் பிழிந்து சில துளி சாற்றினை காதில் விட காது வலி தீரும்.
வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் வேப்பம்பூ கைக்கண்ட மருந்து.
No comments:
Post a Comment