என்னை தொடர்பவர்கள்
எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)
Custom Search
முட்டை மாஸ்
தேவையானப் பொருட்கள்:
* அவித்த முட்டை - 4
* சிறிய தக்காளி - 4
* வெங்காயம் - ஒன்று (பெரியது)
* மிளகாய் - 2
* மல்லி, கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
* ஏதாவது கறி சால்னா - விருப்பப்பட்டால் ஒரு குழிக்கரண்டி
* மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
* சீரகத்தூள் - அரை ஸ்பூன்
* மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
* உப்பு - தேவைக்கு
செய்முறை :
* அவித்த முட்டையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மட்டும் மிக்ஸியில் ஒரு அடி அடித்துக்கொள்ளலாம்.
* நாண்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி, கறிவேப்பிலை, மல்லி, மிளகாய் போட்டு வதக்கி அரைத்த தக்காளி, மசாலா வகை, உப்பு சேர்த்து சிறிது வதக்கவும்.
* பின்பு நறுக்கின அவித்த முட்டையை சேர்க்கவும். அதனுடன் கறி சால்னா பவுடரை சேர்த்து பிரட்டி விட்டு சுண்டி வரும் போது இறக்கவும்.
* சுவையான முட்டை மாஸ் ரெடி.
Posted by
suba
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment