மிக்சியில் மாவு அரைப்பவர்கள் நிறைய விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் பெண்கள் அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை என்றும், அதிக நேரமாகிறது என்றும், இட்லி செய்தால் கடினமாக இருக்கிறது என்றும் புலம்புவார்கள்.
முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு மிக்சியில் மாவு அரைத்தால் இந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம்.
புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால் விரைவாகவும், சுலபமாகவும் அரைபடும்.
மேலும், மாவு அரைக்கும் முன்பு நன்கு ஊறிய அரிசியை சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜ்)ல் வைத்தால் அரைபடும்போது மாவு சூடாவது தவிர்க்கப்படும்.
மேலும், மாவு அரைக்கும்போது தெளிக்கும் நீரும், குளிர்ந்த நீராக இருந்தால் நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment