குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்:
* இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக் சப்பாத்தி, சாண்ட்விச், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், மிக்ஸ்ட் ரைஸ், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.
* புளிக்காத, ஃப்ரிட்ஜில் வைக்காத தயிர்சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இது போன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
* நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாக குழந்தைகளுக்குக் காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள்.
* புரதம் செறிந்த இறைச்சி, பருப்பு வகைகள், முட்டை போன்றவற்றை சரியான அளவில் கொடுக்கலாம்.
* குழந்தைகளுக்கு நார்ச்சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
* எண்ணையில் பொரித்த உணவுகளை விட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகள் நல்லது.
* கடைகளில் வாங்கும் உணவுகள், `பாஸ்ட் புட்'களை கூடியமட்டும் தவிர்த்துவிடுங்கள்.
* இனிப்புச் சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களை கொடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக பாலையும், தண்ணீரையும் கொடுங்கள்.
* இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
*. நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் (இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை, அளவுகளும் மாறும். அதற்கேற்ப கவனித்து உணவளியுங்கள்.
உணவுப் பழக்க வழக்கங்கள் :
1 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். குழந்தைகளுக்கு பழரசம் ஒரு முறை கொடுக்கலாம். 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும். இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்த உணவை விட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.
உடல் உழைப்பு:
2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சி மற்றும் கணிப் பொறி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 2௧8 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தொலைகாட்சி காண வேண்டும். படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் கணிப்பொறியில் வீட்டுப் பாடம் செய்தவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். உணவு மற்றும் உடல் உழைப்புடன் மருந்துகளும் உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது. என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து டிபன்பாக்ஸில் சாப்பாடு கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை ப்ரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு டின்னரில் நீங்கள் குழந்தைகள் மீது கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய நியூட்ரிஷியன்ஸ் இல்லாமல் குழந்தைகள் நார்மல் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள்.ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்
No comments:
Post a Comment