தேவையான பொருட்கள்:
- மைதா - கால் லிட்டர்
- சீனி - முக்கால் லிட்டர்
- மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
- நெய் - அரை லிட்டர்
- தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை:
- முதல் நாள் இரவே மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- காலையில் சீனியை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் வாணலியில் நெய்யைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போல பிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment