என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

மருத்துவ குறிப்புகள்

இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.
வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.
மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.
மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த: வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...