என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க

சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையால் பொறுத்து மட்டுமல்லாது, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக,சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன.

* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.

* தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம்.

* குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.

* குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உதவும். மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.

* குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உ<தட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...