என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

சிக்கன் மஞ்சூரியன்(டிரை)

தேவையான பொருட்கள்:
  • எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
  • ரெட் கலர் - 1 சிட்டிகை
  • மைதாமாவு - 2 டீஸ்பூன்
  • முட்டை - 1
  • சோளமாவு - 4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • வெங்காயம் - 1 சிறியது
  • குடமிளகாய் - 1 சிறியது
  • வெங்காயத்தாள் -4
  • சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

  1. சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டுவிழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில்க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.
  2. வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.

  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

  4. பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும், கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

  5. பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

குறிப்பு:

1.
விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...