தேவையான பொருட்கள்:
- கடலை மாவு - 2 கப்
- தண்ணீர்-3/4கப்
- சீனி - 11/2 கப்
- தண்ணீர்-3 கப்
- முந்திரி பருப்பு – 8
- கிஸ்மிஸ் -8
- ஏலக்காய்பொடி- 1/4தேக்கரண்டி
- சோடா உப்பு-ஒரு சிட்டிகை
- நெய் - 2தேக்கரண்டி
- உப்பு- சிட்டிகை
- மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை
- எண்னைய் - அரை லிட்டர்
செய்முறை:
- கடலை மாவில் உப்பு. சோடா உப்பு சேர்த்து தண்ணீர்-3/4கப் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சாதாரண கண் கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும்.பூந்தி ரெடி.
- இன்னொரு சட்டியை அடுப்பில் வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சீனி,ஏலக்காய்பொடி,மஞ்சள் கலர் பொடிபோட்டு சீனிநன்கு கரையும் வரை கிண்டவும் அதில் செய்து வைத்த பூந்தியை போட்டுகிளரவும்
- பின்னர் ஒரு சிறிய சட்டியில் நெய் ஊற்றி அதில் கிஸ்மிஸ்,முந்திரி வறுத்து பூந்தியில் போட வேண்டும்
- சூடு ஆறியது மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்து கையில் நெய் தடவி உருண்டை பிடிக்கவும்.
No comments:
Post a Comment