தேவையானப்பொருட்கள்:
- மைதா - 1 கப்
- சர்க்கரை - 2 கப்
- கோக்கோ பவுடர் அல்லது சாக்கலேட் பவுடர்- 1 டேபிள்ஸ்பூன்
- பால் பவுடர் - 1/2 கப்
- நெய் - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
- பால் - 1/2 கப்
செய்முறை:
- நெய்யைவாணலியில் போட்டு, உருகியதும் அதில் மைதாவை வாசனை வரும் வரை (2 அல்லது 3 நிமிடங்கள்) வறுத்து எடுத்து, அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதில் பால்பவுடரைச் சேர்த்துக் கிளறி வைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரையுடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு நல்ல பதம் வந்ததும் தண்ணீரில்சிறிது பாகை விட்டால், அது கரையாமல் அப்படியே இருக்க வேண்டும். விரல்களால்எடுத்தால் மிருதுவாக முத்து போல் வர வேண்டும்.
- அத்துடன் வறுத்து வைத்துள்ள மைதாவைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில், வெதுவெதுப்பான பாலில் கோகோவைக் கலந்து ஊற்றி, மீண்டும் நன்றாகக் கிளறவும்.
- வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். சற்று ஆறிய பின் துண்டுகள் போடவும்.
No comments:
Post a Comment