பொதுவாக வெள்ளை பூசணி அதிக நீர் உள்ள ஒரு காயாகும். ஆகவே வாரத்துக்கு இரு முறை பூசணிக்காய் சாறு பல்லது பயத்தம்பருப்பு போட்டு பூசணிக்காய் கூட்டோ செய்து உண்பது நல்லது.
காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு, எலுமிச்சை பிழியவும்.
இந்த வகை சாலட்களை மோருடன் வாரத்துக்கு இருமுறையேனும் மதிய உணவாக்கிக் கொள்ளவும். ஆனால் உணவுமுறை மட்டும் மாற்றினால் போதாது.
நாள்தோறும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்கினால் உடல் எடை கண்டிப்பாகக் குறையும்.
1 comment:
நல்ல பகிர்வு...நன்றி சுபா!
Post a Comment