சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து துண்டுகள் செய்து கொள்ளவும். சின்ன
வெங்காயம் (50 கிராம்), தக்காளி (1) நறுக்கிக்
கொள்ளவும், இஞ்சி (1″), பூண்டு (4 பல்) தட்டிக்
கொள்ளவும்.
வெங்காயத்தை சிறிது எண்ணையில் நன்கு
வதக்கி.,அரைத்து கொள்ளவும்.
வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி.,
பட்டை(1), கிராம்பு(2), கறிவேப்பிலை சிறிது
போட்டுத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது
போடவும். பின்பு அரைத்த வெங்காயம் சேர்த்து
வதக்கி, தக்காளி சேர்த்து எண்ணை பிரியும்
வரை நன்கு வதக்கி, சிக்கனைச் சேருங்கள்.
பின்பு மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி), மிளகாய்
தூள் (1 தேக்கரண்டி), தேங்காய் பால் (1 மேசைக்
கரண்டி), தேவையான உப்பு சேர்த்து, 1/2 கப் நீர்
ஊற்றி சிக்கன் நன்கு வெந்து, நீர் வற்றி கெட்டியான
உடன் இறக்கவும்.
No comments:
Post a Comment