என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

கொத்து இடியாப்பம்

South Indian Recipe: Shredded Idiyappam - Cooking Recipe in Tamil

நூடுல்ஸ் சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை அவஸ்தைகளுக்கு அடகு வைத்தவரா நீங்கள்...... இதோ! உங்களுக்காக சத்தான நம்ம ஊர் ஸ்பெஷல் நூடுல்ஸ் ரெடி. அட இது நம்ம 'இடியாப்பமா'னு ஆச்சர்யப்படும் அளவிற்கு நாவில் ஒட்டிக்கொள்ளும் இதன் சுவை...!
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் (உதிரியானது) - 2 கப்
வேக வைத்த நாட்டுக் காய்கறிகள் (கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு) - தலா 50 கிராம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் டீஸ்பூன்
சோம்புத் தூள் - 1\2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்த மல்லி - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
* கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கவும்.
* பிறகு தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
* சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து வதக்கவும்.
* காய்கறிகளை வேக வைத்த தண்­ணீருடன் சேர்க்கவும்.
* உப்பு சேர்த்து தண்­ணீர் வற்ற நன்கு வேக விடவும்.
* தண்ணீ­ரே தெரியாமல், எண்ணெய் கக்கும் அளவுக்கு வந்ததும், இடியாப்பம் சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தணலில் வைத்து, ஒரு கைப்பிடி தண்ணீ­ர் தெளித்துக் கிளறவும் (இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீ­ர் தெளிக்க வேண்டும்).
* 3 நிமிடங்களுக்கு மூடி வைத்து, மறுபடி கிளறிவிட்டு, கடைசியாக சோம்புத் தூள் தூவிப் பரிமாறவும்.
* காய்கறிகளுக்கு பதில் காளான் மட்டுமே சேர்த்தும், இதே முறையில் கொத்து இடியாப்பம் செய்யலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...