கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்).
* அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பாஸ்ட் ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
* வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்!
* உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.
* மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்க்ஷேக்.
* எண்ணெய் குறைவாக மூன்று தோசை, சர்க்கரை இல்லாத சப்போட்டா மில்க் ஷேக்.
* ரவா அல்லது சேமியா உப்புமா, சர்க்கரை இல்லாத ஃபைன் ஆப்பிள் ஜூஸ்.
* ஒரு கைப்பிடி உலர் பழங்கள் (அ) ஒரு கப் தயிர் (அ) அவித்த சோளம் (அ) கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.
* மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு.
* இனிப்பான பிரெட் (அ) சர்க்கரை இல்லாத மில்க்ஷேக் (அ) பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாயங்கால ஸ்நாக்ஸ் ஆக உட்கொள்ளலாம்.
* இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். நான்கு சப்பாத்தி, காய்கறி குருமா, தயிர் (அ) குறைவான தேங்காய் இல்லாத குருமாவுடன் நான்கு ஆப்பம்.
அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது!
No comments:
Post a Comment