தேவையான பொருள்கள்:
- கடலை மாவு – 1 கப்
- நெய் – 1 1/2 கப்
- சர்க்கரை – 2
- ஏலப்பொடி
செய்முறை:
- கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் சலித்து, வெற்று வாணலியில் மிக லேசாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான உருளியில் சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கரைய விடவும்.
- இந்த நேரத்தில் இன்னொரு அடுப்பில் நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரை முழுவதும் கரைந்து, ஒற்றைக் கம்பிப் பாகு வந்ததும், கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே, கைவிடாமல் கட்டியாகாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- எல்லா மாவும் சேர்த்து, கட்டி எதுவும் இல்லாமல் மாவு மொத்தமாக சர்க்கரைக் கலவையில் கலந்ததும், பக்கத்து அடுப்பில் சூடாக, உருகி இருக்கும் நெய்யை(இதன் அடுப்பை சிம்’மிலே வைத்து சூடு குறையாமலே வைத்திருக்கவும்.) ஒவ்வொரு கரண்டியாகச் சேர்க்க ஆரம்பிக்கவும்.
- நெய்யைச் சேர்க்கும்போதெல்லாம் கலவை சர்’ரென பொங்கும்; கைவிடாமல் கிளறவும்.
- எல்லா நெய்யும் சேர்த்து முடித்ததும், ஏலப் பொடியும் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கும்போது, நுரை மாதிரி பொங்கி, தானே வெடித்து உடைந்து உடைந்து பொத்தல்கள் வரும். இதுதான் மைசூர்பாகு பதம்.
- அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டவும்; சமப்படுத்தும்போது அழுத்தக் கூடாது.
- லேசாக ஆறியதும் வில்லைகள் போடலாம். மேலாக சர்க்கரை தூவி அலங்கரிக்கலாம்.
No comments:
Post a Comment