தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- சோள மாவு - 1 தேக்கரண்டி
- அரிசி மாவு - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- உருளைக்கிழங்கை சிறு சிறு (சதுர) துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும்.
- பின்னர் அதனுடன் சோளமாவு, மிளகாய்தூள், உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
- எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
குறிப்பு
1. பிசறும் போது சிறிது சோம்பு சேர்த்துக் கொண்டால் வாசனையாக இருக்கும்.
No comments:
Post a Comment