1.மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி5 கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளக்க தொடங்கும்
2.இரவில் படுக்கப்போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர மேனி ஜொலிக்க தொடங்கும்
3.அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் பளபளக்கும்
4.ஆரஞ்சுப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பொலிவு பெரும.
5.கோரைக் கிழங்கு பொடியை சாப்பிட்டு வர உடம்பில் பொலிவு உண்டாகும்.
6.அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் தேனில் சேர்த்து பருகிவர உடலழகும் முக அழகும் கூடும்.
7.முருங்கை பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வந்தால் உடல் வனப்பு உண்டாகும்
No comments:
Post a Comment