பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் - இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும்.
பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.
கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.
பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.
குளிப்பதற்கு10 நிமிடத்திற்கு முன் தேங்காய் எண்ணெயை சிறிது பூசி கழுத்துபகுதியில் மசாஜ் செய்து குளித்து வர கழுத்துபகுதியில் உள்ள கருப்பு மறைந்து கழுத்து மினுமினுக்க தொடங்கும்
No comments:
Post a Comment