என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search
ஆண், பெண் இருவருக்கும் இதோ சில அழகு குறிப்புகள் 





 

பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் ,பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளபளப்பாக மாற தொடங்கும்

சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்

வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது  சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் 2 அல்லது  3 முறை    அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது

ஒரு சில ஆண்,பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும் அதற்கு நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்

ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.


வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...