என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search
தலையில்  புழு வெட்டு 

1 கடுக்காயை அரைத்து இரவில் புழுவெட்டு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி, மறுநாள் காலையில் கழுவிவிடலாம்.

2 புழு வெட்டு, பொடுகு ஆகியவற்றால் விழுந்த சொட்டை தலையில், வழுக்கு குமட்டி காயின் சாற்றை தேய்த்தால் மீண்டும் முடி முளைக்கும்

3 வேப்பம்பட்டையை   எடுத்து  தண்ணீரில் போட்டு, நன்றாக காய்ச்சி வடி கட்டவும் . ஆறியபிறகு அதில் கையிட்டுச் சிலுப்பினால் நுரை வரும். அதை எடுத்து புழுவெட்டு உள்ள பகுதிகளிகளில் தேய்த்து வர புழு வெட்டு குணமாகும்

4 கரு ஊமத்தை இதன் பிஞ்சை உமிழ்நீர் விட்டு அரைத்து தலையில் புழு வெட்டு ஏற்பட்ட இடங்களில் தடவ புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்

5 வெள்ளைப்பூண்டை நன்றாக நசுக்கு அதன் சாற்றை புழு வெட்டு  உள்ள  இடங்களில் தடவ புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்

6 தூர்வாதி தைலம், மாலத்யாதி தைலம், சதுக்கஷீரி தைலம், அய்யப்பாலா தைலம் ஏலாதி தைலம் போன்ற தோல் பாதுகாப்பைத் தரும் தைலங்களில் ஒன்றை குழந்தைகளுக்குத் தலையில் தொடர்ந்து தேய்த்து தலை சீவிவர, புழுவெட்டு உபாதை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

7 300 மி.லி. நல்லெண்ணெய்யில் 30 கிராம் வேப்பம்பூ, 15 கிராம் வெல்லம் சேர்த்து முறியக் காய்ச்சி வடிகட்டி, தலை முழுகவும். தலைக்குத் தடவி வந்தால் பொட்டு பொடுகு புழுவெட்டு போன்றவை குணமாகி விடும்

2 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...