என்னை தொடர்பவர்கள்
எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search
நிறைமாத கர்ப்பிணிகளின் கவனத்திற்கு...
1 நிறைமாதமாக இருக்கும் பெண்கள் அதிகமாக
சாப்பிடக் கூடாது. அளவோடுதான் சாப்பிட வேண்டும்.
அதிமாகச் சாப்பிடுவதாலும் வயிற்று வலி ஏற்படலாம்.
2 மிகவும் கடினமான காரியங்களில் ஈடுபடக்
கூடாது. வேலை செய்தாலும் மிகவும்
சாதாரணமாகவும் அமர்ந்த நிலையில் தான் வேலை
செய்ய வேண்டும்.
3 தண்ணீர் அவ்வப்போது குடித்து வர வேண்டும்.
குளிர்ந்த நீரைப் பருக வேண்டாம். பிரசவ காலத்தில்
சளி பிடிப்பது பிரச்சினைக்குரியதாக ஆகிவிடும்.
4 இறுக்கமான ஆடைகளை நிச்சயமாக அணியக்
கூடாது. உங்களது உடல் உறுப்புகளை மிகவும்
சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
5 குதிகால் அதிக உயரம் கொண்ட செருப்புக்களை
அணியாதீர்கள். அதிகமான நகைகளையும்
அணிந்திருக்காதீர்கள்.
6 வெயிலில் அலைவதோ, மிகவும் கூட்டமான
இடத்திற்குச் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
7 குளிக்கும் போது மார்பகக் காம்புகளில் வரும்
சிறு பருக்கள் போன்றவற்றை அகற்றிவிட்டு சுடு
தண்ணீரில் கழுவி விடுங்கள்.
8 எப்போதும் ஒருவரது துணையுடன் இருங்கள்.
எங்கே செல்வதாக இருந்தாலும் ஒருவரை துணைக்கு
அழைத்துச் செல்லுங்கள். வெகு தூரப் பிரயாணத்தை தவிர்த்துவிடுங்கள்.
9 உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிரசவ
தேதிக்கு 2 நாட்களுக்கு முன்னரே மருத்துவம
னைக்குச் சென்றுவிடுங்கள்.
10 பிரசவ தேதி வரை வயிற்று வலி இல்லாமல்
இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
சிலருக்கு பிரசவ வலியே வராமல் இருக்கும்.
ஆனாலும் குழந்தை சரியான இடத்திற்கு வந்துவிடும்.
எனவே மருத்துவரை நாடுகள்.
Posted by
suba
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சுபா , இவை தேவையான அறிவுரைகள் . இத்துடன் நானும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கிறேன்.
எட்டு மாதத்தில் இருந்து கஸ்தூரி மஞ்சள் பூசி குளிப்பது கிருமி நாசினியாக பயன்படும். மாடிப்படியேறுவது நல்லதல்ல. மேல் மூச்சி வாங்க நேரிடும். இது பிரசவத்தை சிரமமாக்கும். dilation மெதுவாக நடக்கும். குனிந்து நிமிர்ந்து வேலை பார்க்க வேண்டாம். ஆனால் நடந்து கொடுக்கலாம். இது குழந்தை rotate ஆக உதவும்,உடல் உஷ்ணம் அதிகரிக்கும் உணவு வகைகளை மறுப்பது நல்லது.
Post a Comment