தேவையானப்பொருட்கள்:
பொட்டுக்கடலை - 3 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10 அல்லது 15
செய்முறை:
பொட்டுக்கடலையையும், சர்க்கரையையும் தனித்தனியாக
மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்து, சலித்து எடுக்கவும்.
பொட்டுக்கடலை மாவை அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
பொடித்த சர்க்கரையும் அதே அளவு இருக்க வேண்டும்.
சர்க்கரைப்பொடி கூடவோ, குறையவோ இருந்தால்
அதற்கேற்றாவாறு சரி செய்து கொள்ளவும். மாவையும்,
சர்க்கரைப்பொடியையும் ஒன்றாகக் கலக்கவும்.
அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு சூடானதும், அதில்
முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மாவில்
போட்டு மீண்டும் நன்றாகக் கலக்கவும்.ஒரு தட்டில்,
நாலைந்துக் கரண்டி பொட்டுக்கடலைமாவு கலவையைப்
போட்டு, அதில் சிறிது சூடான நெய்யை விட்டுக் கிளறி,
அதே சூட்டுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும். இதே போல்
எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு,
சூடான நெய் சேர்த்து உருண்டைகளைப் பிடித்தெடுக்கவும்.
No comments:
Post a Comment