என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search


இதோ சில சமையல் டிப்ஸ் 


கேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கே‌க்‌கி‌லிரு‌ந்து ‌கீழே விழாது.

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

பருப்பு வேக வைக்கும்போது ஒரு கா‌ய்‌‌ந்த ‌மிளகாயை ‌கி‌ள்‌ளி‌ப் போடவு‌ம். ‌பரு‌ப்பு சீ‌க்‌கிர‌ம் வெ‌ந்து ‌விடு‌ம்.

முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன்வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

இ‌னி‌ப்புக‌ள் செ‌ய்யு‌ம் போது நெ‌ய்‌க்கு ப‌திலாக வெ‌ண்ணெ‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் ‌மிருது த‌ன்மை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் அடிப்பிடிப்பதைதவிர்க்கலாம். 

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். 

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால்
உருளைக்கிழங்கு ஒரு துண்டு அல்லது   இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை உறிஞ்சிக் கொள்ளும்.

எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.




உடல் குண்டாக வேண்டுமா?




*சோயா, இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி,போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும் 

*பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வரஉடல் எடையை அதிகரிக்கும் .
*ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம் பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றை யும் தினமு ம் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு குண்டாக தொடங்கும்  
*சோற்றுக் கற்றாழையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்  உடல் தேறும்.
*பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

*பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கட லை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதி கம் நிறைந்துள்ளது. ஆகவே இத ற்கான டயட் இருக்கும்போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டு ம். இவை அனைத்துமே ஆரோக் கிய மான கொழுப்புகள் தான்.
மேலும் உடல் எடையை அதிகரி க்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரு ம் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழ ங்களை சாப்பிடுவதும், உடல் எடை யை அதிகரிக்கச் செய்யும் உணவுக ள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக் லேட்டில்கூட அதிக கலோரிகள் நி றைந்துள்ளன.

*முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.
பீட்ஸ் குக்கீஸ்
 

தேவையான பொருட்கள் 
நிலக்கடலை                 500 கிராம் 
ஐசிங் சீணி                      500 கிராம்
 மா                                      500 கிராம்
மரக்கறி எண்ணெய்    2 கப் 
வெனிலா எசன்ஸ்       2 தேக்கரண்டி

செய்முறை 
                      நிலக்கடலை தோலை உரித்து சுத்தம் செய்து கொள்க பின் அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்க பின் அதில் சலித்த ஐசிங் சீணி,மா,வெனிலா எசன்ஸ் ஆகியவற்றைப் போட்டு கொள்க அதில் மரக்கறி எண்ணையை கொஞ்ச,கொஞ்சமாக ஊற்றி பிணைந்து கொண்டு அதனை  நீங்கள் விரும்பிய வடிவில் தட்டி பேக் பண்ணிக்கொள்க. இதோ தயார் பீட்ஸ் குக்கீஸ்

தலையில்  புழு வெட்டு 

1 கடுக்காயை அரைத்து இரவில் புழுவெட்டு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி, மறுநாள் காலையில் கழுவிவிடலாம்.

2 புழு வெட்டு, பொடுகு ஆகியவற்றால் விழுந்த சொட்டை தலையில், வழுக்கு குமட்டி காயின் சாற்றை தேய்த்தால் மீண்டும் முடி முளைக்கும்

3 வேப்பம்பட்டையை   எடுத்து  தண்ணீரில் போட்டு, நன்றாக காய்ச்சி வடி கட்டவும் . ஆறியபிறகு அதில் கையிட்டுச் சிலுப்பினால் நுரை வரும். அதை எடுத்து புழுவெட்டு உள்ள பகுதிகளிகளில் தேய்த்து வர புழு வெட்டு குணமாகும்

4 கரு ஊமத்தை இதன் பிஞ்சை உமிழ்நீர் விட்டு அரைத்து தலையில் புழு வெட்டு ஏற்பட்ட இடங்களில் தடவ புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்

5 வெள்ளைப்பூண்டை நன்றாக நசுக்கு அதன் சாற்றை புழு வெட்டு  உள்ள  இடங்களில் தடவ புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்

6 தூர்வாதி தைலம், மாலத்யாதி தைலம், சதுக்கஷீரி தைலம், அய்யப்பாலா தைலம் ஏலாதி தைலம் போன்ற தோல் பாதுகாப்பைத் தரும் தைலங்களில் ஒன்றை குழந்தைகளுக்குத் தலையில் தொடர்ந்து தேய்த்து தலை சீவிவர, புழுவெட்டு உபாதை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

7 300 மி.லி. நல்லெண்ணெய்யில் 30 கிராம் வேப்பம்பூ, 15 கிராம் வெல்லம் சேர்த்து முறியக் காய்ச்சி வடிகட்டி, தலை முழுகவும். தலைக்குத் தடவி வந்தால் பொட்டு பொடுகு புழுவெட்டு போன்றவை குணமாகி விடும்

ஆண், பெண் இருவருக்கும் இதோ சில அழகு குறிப்புகள் 





 

பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் ,பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளபளப்பாக மாற தொடங்கும்

சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்

வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது  சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் 2 அல்லது  3 முறை    அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது

ஒரு சில ஆண்,பெண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும் அதற்கு நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும்

ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும்.


வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.



கர்ப்ப காலத்தில் ,அதற்கு பின்னும் 

1கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண்,உதட்டை,கழுத்து சுற்றிலும் கருமை  படர்ந்து  கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது.குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருப்பினும் சிலருக்கு கருமை நிறம் தங்கிவிடும். இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதைதேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.

2எந்த ஒரு மசாஜ் செய்யும் போதும்  சூடான அல்லது வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அந்த எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால் மிகவும் நல்லது. ஆகவே மசாஜை வீட்டில் செய்து உடலை ஆரோக்கியமாக, பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்

3கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முகம்,கை,கால்,வறண்டு காணப்படும்  இதற்கு 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி  அதனை கொஞ்சம்,கொஞ்சமாக  வறண்ட இடத்தில் பூசி  30 நிமிடங்கள் வரை  ஊறவைத்து குளித்தால் நாடளவில் வறட்சி மறைந்து பொலிவடைய தொடங்கும்

4கர்ப்பகால தழும்புகளை போக்க ஆவகேடோ எண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து கருமை , வரி உள்ள இடங்களிலும் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒரு மாதம் தொடர்ந்து இதுபோல் செய்து வரலாம். பிரசவ கால தழும்புகள் 
மறையும்

5அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து  நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக  கரைத்து  குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.                             
அழகுக் குறிப்புகள்:

1வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்
2சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
3புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

4கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

5முகம் மிருதுவாக இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்

 6தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும் 


 7பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

8பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி  மறைந்து முகம் அழகாக மாறத் தொடங்கும்


9பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

10சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்

தேமல் மறைய சில வழிகள் 

1ஆரஞ்சு  தோலை பொடி செய்து தினமும்  தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

2மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை தேமல் உள்ள  பகுதிகளில் தேய்த்தால் தேமல் மறையும்.
3மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு  குறையும்.
4துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.
5கீழாநெல்லி இலை, கொத்தமல்லி இலை இவற்றை பாலில் அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள்  கழித்துக் குளித்து வந்தால் தேமல் குறையும்.
6வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.
7தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்
8முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.
9ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
10தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.

குறிப்பு: தேமல் உள்ளவர்கள் சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

அழகு குறிப்புகள் சில..........


அழகு குறிப்புகள் சில.......... 

1வேக வைத்த உருளைக்கிழங்கு,கேரட்,ஆப்பிள் தேன் அல்லது சக்கரை கலந்து முகத்தில் பூசி மசாச் செய்து வர முகம் பளபளப்பாகும் 

2கூந்தல் கருமையாக பளபளப்பாக இருக்க சிறிது தேங்காய்எண்ணெய்,புளித்ததயிர்,ஒரு எலுமிச்சம் பழச்சாறு 
கலந்து 15 நிமிடம் வரை ஊற வைத்து குளித்து வரவும் 

3ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை 
சாறுசிறிது சர்க்கரை(சீனிகலந்து 30 நாட்கள் காலையில் 
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம்மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

4முடி செழித்து வளர வாரம் ஒரு​முறை வெண்​ணெ​யைத் 

தலைக்​குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்​தால் 

முடி நன்​றாக வள​ரும்.​

5நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனுடன் நான்கு ஸ்பூன் தேன்சிறிது 

கிளிசரின் சேர்த்து கலந்துகண்ணைச்சுற்றியுள்ள பகுதி தவிர 

மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து

முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.

6ஆரஞ்​சுப் பழத்தை இரண்​டாக வெட்டி முகத்​தில் தேய்த்து,​​ 

பத்து நிமி​டம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்​டும்.​ 

தினம் இவ்​வாறு செய்து வந்​தால் முகம் பள​ப​ளப்​பா​கும்,​​ 

இள​மை​யு​ட​னும் இருக்​கும்.​ 

7பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக 

வைத்துஅது நன்றாகவெந்ததும் அதை அரைத்துக் 

கொள்ளுங்கள்இந்த கூழை முகத்தில் தடவி 15நிமிடம் 

கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து 

வந்தால்முகம்மென்மையானதாக மாறிவிடும்.

8தேங்​காய் எண்​ணெ​யில் மஞ்​சள் தூளைப் போட்​டுக் 

குழைத்து உடம்​பிற்கு தடவி,​​ பயத்​த​மாவை தேய்த்​துக் ​ 

குளித்​தால் தோல் பள​ப​ளப்​பா​க​வும்,​​ மிரு​து​வா​க​வும் 

இருக்​கும்.​ 

9தின​மும் குளிக்​கும் முன்பு பாலேடை முகம் முழு​வ​தும் 

தடவி பத்து நிமி​டம் வைத்​தி​ருந்து கழு​வி​னால் வறண்ட 

முகம் பொலிவு பெறும்.​ 

10தேன், முட்டையின் வெள்ளை கரு,ஆரஞ்சு சாறு 
இவற்றை கலந்து முகத்தில் பூசி 20  நிமிடம் வரை 
வைத்திருந்து கழுவி வர முகம் சிவப்பளகாக மாறும் 


Related Posts Plugin for WordPress, Blogger...