என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

மூக்கை பராமரிக்க சில ஆலோசனைகள்

எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை 
மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் 
மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் 
செய்ய வேண்டும். .

ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்
வரை ஆவி பிடிக்க வேண்டும்.  பிறகு கண்ணாடியைப் 
பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் 
ஹெட் ரிமூவரால் மெதுவாக நீக்கலாம்  வெளியே வேரோடு 
வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து 
எடுத்துவிடுங்கள்.  இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை 
நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் 
முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம்.
ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்
போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே 
ஒயிட் ஹெட்ஸ் வராது.

 மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, 
வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை 
கெடுக்கிற விஷயம்தான்.  புருவத்தை ட்ரிம் செய்ய உதவும்
கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். 
இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் 
கிடைக்கும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது சப்பையான மூக்கு 
உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் 
அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு 
ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் 
இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் 
ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு 
போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் 
லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் 
இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது.

சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் 
கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக 
இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் 
உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...