என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்..



சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், 
நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். 
அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,
நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட 
வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது 
நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து,

அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், 
விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள்

உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் 
ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு 

பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், 
நகங்கள் உறுதியாகும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை 

விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ 
வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் 
நன்றாக வளரும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் 

கல்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். 
எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து 
நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட 
வேண்டும்.

நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது 

நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை 
அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் 
பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து 
பயன்படுத்துவது நல்லது.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை

வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், 
நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் 
பளபளப்பாகும்.

நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் 

அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட 
வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித 
திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை 

நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், 
நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் 
எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை 
மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். 
மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...