என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

அழகுக் குறிப்புகள்


முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை
கரு, சர்க்கரை,சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து
பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.காய்ந்தவுடன்
மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து,
பத்து நிமிடம்கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி
முகத்தில் தடவினால்சருமத்தில் உள்ள எண்ணெய்ப்
பசை குறையும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக்
கழுவினால் வறண்டசருமம் புதுப் பொலிவடையும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து
உடம்பிற்கு தடவி,பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல்
பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில்
தடவி, 20 நிமிடம்கழித்து கழுவினால், சருமம் மிகவும்
மிருதுவாகும்.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி,
அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்
பருப்பு மாவை கலந்து முகத்தில்தடவிக் கொண்டு பத்து
நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம்
சுத்தமாகும். பருக்களினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி
எலுமிச்சை சாற்றைதடவ வேண்டும். தினமும் இவ்வாறு
செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம்அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும்
காலையில் ஒரு டம்ளர்வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு
மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்துஅதனுடன் அரை
ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது
நேரம் கழித்துநகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும்,
அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி
முட்டையில் கொஞ்சம்சர்க்கரையை கலந்து தலையில்
லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்றவேண்டும்.
இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில்
எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, தலையில் தேய்த்துக்
குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி
இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதில் சிறிது எடுத்து, பாலில்குழைத்து, முகத்தில் பூசி, 20
நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்வேர்க்குரு வராமல்,
வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன்
உப்பைப் போட்டு,கண்களை கழுவினால் கண்கள்
பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால்,
தொடர்ந்துஅந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து
சோப்பு போட்டு குளிக்கவேண்டும் நாளடைவில் கறுப்பு
நிறம் போய் விடும். தோல் வறண்டும்,சுருக்கமும் இருந்தால்
ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து,
சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...