என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

முகம் பளபளக்க புரூட் மசாஜ்


பாலை உபயோகப்படுத்தி முகம் முழுவதும் பூசி மெதுவாக
பஞ்சைக் கொண்டு துடைக்க வேண்டும். இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்


மசாஜ் செய்ய தயிரை, தேனை  உபயோகப்படுத்த வேண்டும். 
இது சூரியக்கதிர்களின் தாக்குதலால் ஏற்படும் சருமக் 
கருப்பைப் போக்கும். அதிக சத்தும் சருமத்திற்கு கிடைக்கும். 

பப்பாளி விழுதைச் சேர்த்து வறண்ட மற்றும் சாதாரண 
சருமத்தினர் மசாஜ் செய்ய உபயோகப்படுத்தலாம். 

தக்காளி, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் கலவையைக் 
கொண்டு மசாஜ் செய்தால் முகம் மிகவும் பளபளப்புடன் 
இருக்கும்.

பழுத்த வாழைப்பழத்தை கூழாக்கி ஒரு ஸ்பூன் தேன் 
கலந்து முகத்தில் பூசினால் முகம் பொலிவாக 
இருக்கும் இதனை அனைத்து சருமத்தினரும் 
உபயோகப்படுத்தலாம்.

சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப்
பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் 
அழுத்தி தடவ வேண்டும்.

நீங்கள் ஏதேனும் மசாஜ் செய்து  முடிந்தவுடன் சிறிய 
டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்துபொறுக்கு
மளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று 
நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு 
இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். 
அவ்வாறு செய்ய இயலாதவர்கள் சிறிய 
பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க
வேண்டும் வேப்பிலைகள் சிறிது சேர்த்து ஆவி
பிடித்தால் மிகவும் நல்லது.

பேக் போட கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்

கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் 
பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றை அரைத்து 
பேக் போட்டு அரைமணி நேரம் கழித்து முகம் கழுவ 
வேண்டும். மேற்கூறியவற்றில் ஏதாவது இரண்டு 
அல்லது மூன்று சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் 
கொள்ளலாம். இந்த பேசியல் செய்த உடனேயே
கண்கள் குளிர்ச்சியடையும். முகம் பளபளப்பாகவும் 
அழகாகவும், பொலிவுடனும் மாறும்.

ஸ்ட்ராபெரி பழம் சருமத்தை இலேசாக வெளுக்கச் 
செய்யும் தன்மை  கொண்டது.முகத்திலுள்ள பருக்களின் 
வடுக்களை விரைவில் மறையச்செய்யும் குணம் 
கொண்டது. 

வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், 
சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும். 
ப்பத்தைக் கொண்டு மசாஜ் செய்தால் முகத்தில் நல்ல
மாற்றம் காணலாம் 


விளாம்பழ அழகு குறிப்புகள்

சருமப் பொலிவுடன் கேச ஆரோக்கியத்துக்கும் விளாம்
பழம் வழி சொல்கிறது. பயத்தம்பருப்பு ,விளாங்காய் 
விழுது சம அளவு எடுத்து அதனுடன் பாதாம்பருப்பு 2 
இவை அனைத்தையும் முந்தின நாள் இரவே ஊற 
வைத்து மறுநாள் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். 
இந்த கிரீம்-ஐ முகத்தில் பூசினால் நாள்பட்ட பருக்கள்
கூட மாயமாக மறைந்து விடும். தழும்பும் இருந்த 
இடம் தெரியாமல் போய்விடும்.
 
விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் 
காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள்,
 பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு.. 
எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்துக் . 
இதை குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு 
தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும் புள்ளிகளும்
 காணாமல் போகும்.  

பருக்கள் முற்றி அதிலிருந்து ரத்தம் வடிந்தாலும் இந்த
 கிரீம் ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டு மருத்துவ 
பலனை தரும்). விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை
 மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.

ப்ரெட் சமோசா



  • தேவையான பொருட்களை
  • ப்ரெட் - 8 பீஸ்
  • மைதா - ஒரு கப்
  • கேரட் - 3 (பொடியாக நறுக்கியது)
  • பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
  • உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
  • கொத்தமல்லி தழை - சிறிது
  • இஞ்சி - பொடியாக நறுக்கியது
  • வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
  • கரம் மசாலா, மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • செய்முறை 
  • கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,
  • பச்சைமிளகாய்,இஞ்சி ஆகியவற்றை வாசனை
  • வரும் வரை வதக்கவும் பின்னர், அதில் கேரட்,
  • பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்
  • உருளைக்கிழங்கு,கரம் மசாலா,மிளகாய் தூள், 
  • உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.கலவை நன்கு 
  • வாசனை வரும் போது உதிர்த்து வைத்து 
  • இருக்கும்ப்ரெட் துண்டுகளை போட்டு நன்கு 
  • கிளறவும் பின் மைதா மாவை, சப்பாத்தி
  • மாவு பதத்திற்கு பிசைந்து தேவைப்படும் வடிவில் 
  • தேய்த்து கொள்ளவும். அதன் நடுவே கடாயில் 
  • இருக்கும் கலவையை வைத்து ஓரங்களை சுருட்டி 
  • விடவும்.பின்னர், எண்ணெயில் போட்டு பொரித்து 
  • எடுக்கவும். இப்போது ப்ரெட் சமோசா தயார்   

தேமல் மறைய சில வழிகள்

வேப்பிலைகளை அரைத்துத்  தேமல் மீது தடவிவர  தேமல் குறையும்

குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்

கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும் 
Related Posts Plugin for WordPress, Blogger...