தேவையான பொருட்கள்
- சிக்கன் தொடைப்பகுதி – 7
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
- தயிர் – 1 /2 கப்
- எலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டி
- இஞ்சி,பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
- சிகப்பு கலர் பவுடர் – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- வெண்ணெய் – 1 தேக்கரண்டி
- வெங்காய வலயங்கள் – சில
- நறுக்கிய எல்லுமிசை துண்டுகள் – சில
- மல்லித்தழை – சிறிது
செய்முறை
- சிக்கன் தொடைப்பகுதிகளை மேலே கொடுத்துள்ள பொருட்களைப் பயன்படுத்தி 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
- பேக்கிங் தட்டை எடுத்து அதன் மேலே அலுமினியம் பாயிளால் சுற்றி விடவும். சீட்டில் மேலே எண்ணெய் தடவி விடவும்.
- அவனை 450 டிகிரி வைத்து சூடு செய்யவும்.
- ஊற வைத்துள்ள சிக்கனை சீட்டில் வைத்து, தட்டை அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்.
- 20 நிமிடங்கள் கழித்து அவனை ப்ராயில்க்கு மாற்றி 2 நிமிடங்கள் வைக்கவும்.பின் சிக்கனை திருப்பி வைத்து ப்ராய்லில் மேலும் 2 நிமிடங்கள் வைத்து வெளியே எடுக்கவும்.
- சிக்கன் துண்டுகளின் மேலே வெண்ணெய் தடவி விடவும்.
- சிக்கன் துண்டுகளை தட்டில் வைத்து அலங்கரிக்க கொடுத்துள்ள பொருட்களைப் பயன்படுத்தி அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment