1.கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.
2.நின்றபடியே கால்களை மாறிமாறி இடுப்பு வரை தூக்கி டான்ஸ் ஆடவும்..
3.கதிரையில் அமர்ந்து கொண்டு கால்களை மடக்கியபடி மேல் நோக்கி தூக்கி இறக்கவும். கால்களை மாற்றி மாற்றி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். சுமார் 20 முறை இப்படிச் செய்தால் போதும்.
4.அதிகமான மாடிப்படிகளில் ஏறி இறங்கவும்.
5சுவரில் ஒரு கையை வைத்துக்கொண்டு காலை முன்னால் நீட்டி உதைப்பது போல 30 முறை செய்யவும்.
6.ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு கால்களை 20 முறை மேலே தூக்கி இறக்கவும். இடது பக்கமும், வலது பக்கமும் மாறி மாறி படுத்துக்கொண்டு இதைச் செய்ய வேண்டும்.
7.நேராக நின்றபடி உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ளவும். கைகளை தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 30 முறை இப்படி செய்யவும்.
இந்த உடற்பயிற்சிகளை சரியான முறையில் தொடர்ந்து செய்தால் தொடைப் பகுதியில் சதை குறைந்து ஸ்லிம் ஆகி அழகாகும்.
No comments:
Post a Comment