என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பாதங்கள் அழகு பெற சில டிப்ஸ்


மிதமான சுடுதண்ணீரில் சிறிதளவு ஷாம்பு, சிறிது உப்பு, பாதி எலுமிச்சை சாறு கலந்து அந்த தண்ணீரில் பாதங்களை பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்பு ஸ்க்ரப்பர் கிரீமை தடவி மசாஜ் செய்யவும். வெட்டப்படாமல் இருக்கும் பாத நகங்கினால் நமக்கு பல வகையில் இடைஞ்சலாக இருக்கும். கியூட்டிகல் கட்டர் மூலம் நகங்களை வெட்டி ஷேப் செய்து விடவும்.

தொடர்ந்து ஆல்மன்ட் ஆயில் தடவி வர பாத வெடிப்பு குணமாகும்.

வெடிப்புள்ள பகுதிகளில் எழுந்து நடக்கும் போது வலி இருந்தால் இரவில் படுக்கும் முன் பிண்ட தைலம் பூசி விடவும். இது சிறந்த வலி நிவாரணி மட்டுமல்ல, வெடிப்பையும் குணமாக்கும்.


தினமும் குளிக்கும்போது குளியலறையின் தரையில் பாதங்களை மென்மையாக தேய்க்கவும். அல்லது அழகு நிலையங்களில் கிடைக்கும் அழுக்கு நீக்கும் கல்லை பயன்படுத்தலாம். ஈரமான பாதத்தை சோப்பு நுரையுடன் இக்கல்லில் தேய்க்கலாம். பின் கஸ்தூரி மஞ்சள் அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை தடவி வந்தால் வெடிப்பு சரியாகும்

.
பாத வெடிப்பு அதிகம் உள்ளவர்கள் மருதாணியை அரைத்து பூசி வந்தால் கால்கள் குளிர்ச்சியாக இருப்பதோடு வெடிப்புகள் சரியாகும்.


வெடிப்பு உள்ள பாதங்களை ஐஸ் கட்டியில் சிறிது நேரம் ஊறவைத்து பின் சந்தனத்தூளை பூசி 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை அலசவும். இதுபோல் செய்து வந்தால் வெடிப்பு சரியாகும்.

கடுகு எண்ணெய் வாங்கி சூடாக்கி பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாதங்கள் அழகாவதுடன் கால்வலி உள்ளவர்களுக்கு கால்வலி நீங்கும்.

நகப்பூச்சு உபயோகிப்பவர்கள் வாரம் ஒரு முறை நகங்களில் உள்ள நகப்பூச்சு நீக்கி (நெயில்பாலிஷ் ரிமூவர்) மூலம் சுத்தம் செய்துவிட்டு ஒரு நாள் முழுவதும் நகப்பூச்சை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம். இப்படி செய்வது நகங்களுக்கு நல்லது.

முகத்திற்கு போடும் ப்ளீச் கிரீம், க்யோலின் பவுடர், ஹைட்ரஜன் பெராக்ஸை டு ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கி சுத்தமாகும்.

தண்ணீரில் ரோஜா இதழ்கள், எலுமிச்சை சாறு, வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பின்பு சுடவைத்த நீரை ஆறவைத்து மிதமான சூட்டில் கால்களை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதுபோல் செய்துவந்தால் கால்கள் சொரசொரப்பு இன்றி மிருதுவாக ஆகும்.

கஸ்தூரி மஞ்சள் மற்றும் பச்சை பயிறை பவுடராக்கி அதனுடன் கோதுமை மாவு மற்றும் கடலை மாவு ஆகியவற்றையும் சேர்த்து பன்னீரில் கலந்து பாதத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து பாதங்களை கழுவினால் பளபளப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...