ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வறட்சி மாறும்.
பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த போஸ்டை பயன்படுத்தவும்
முகப்பரு மாறினாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை
பருக்களின் மீது தடவிவரவும்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும்.
பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முதலில் சருமத்தைக் குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் கடைகளில் கிடைக்கும் சரும வறட்சியைக் குறைக்கும் க்ரீம்களையும், சூரிய வெப்ப தாக்குதலில் இருந்து காக்கும் க்ரீம்களையும் தடவிக் கொள்ளுங்கள்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
No comments:
Post a Comment