என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

பொலிவு தரும் முகப் பூச்சுகள்

பொலிவு தரும் முகப் பூச்சுகள்

1. உப்புப் பூச்சு தேவையான பொருட்கள் : கடல் உப்பு இளஞ்சூட்டில் வெந்நீர் செய்முறை : கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும். கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது. **** 2. முட்டைப் பூச்சு தேவையான பொருட்கள் : 1 முட்டை வெள்ளை 1 tsp. தேன் செய்முறை : முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும். மிச்சம் இருப்பதை சில நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் முன் கலவையை நன்கு கலக்கவும். **** 3. பால் பூச்சு தேவையான பொருட்கள் : 2 tbsp. பால் 1 tbsp எலுமிச்சை சாறு 1 tbsp பிராந்தி செய்முறை : மேற்கூறிய மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்.10 - 15 நிமிடத்திற்குப் பிறகு குளிர் நீரால் கழுவவும். **** 4. பால்பவுடர் பூச்சு தேவையான பொருட்கள் : 1/2 கப் பால் பௌடர் 1 tbsp இளம் சூடான நீர் 3/4 tbsp. பால் செய்முறை : மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும். **** 5. ஓட்ஸ் பூச்சு தேவையான பொருட்கள் : 2 tbsp ஓட்மீல் 2 tbsp பன்னீர் 1/2 கப் பால் செய்முறை : பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...