என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

தக்காளியின் சிறப்பு

நாம் எல்லோரும் கட்டாயம் தக்காளி பயன்படுத்த வேண்டும் . அதில் பல சிறப்பம்சங்கள உண்டு . பல வருத்தங்களுக்கு மருந்தாகவும் , நமது அழகாய் மெருகேற்றவும் தக்காளி பயன்படுகின்றது . அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் தக்காளியை .

தக்காளி  சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். தக்காளியின் தாயகம் தென் அமெரிக்கா . நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது . இதில் விட்டமின்  ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது.  நமது உடலில் இரத்த  உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, இரத்தத்தை  சுத்திகரிப்பதட்க்கும் சீரான  இரத்த  ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.  தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது.

இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு இது மிகவும் சிறந்தது . குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

தக்காளியை சாப்பிடும் முன்போ அல்லது கறிகளுக்கு உபயோகிக்கும் போதோ நன்றாக கழுவ வேண்டும் .  மென்மைத் தன்மை இல்லாது முரட்டுத் தன்மையாக இருக்கும் முகத்திற்கு ஒரு தக்காளியை கூழாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் முகம் மிருதுவாகி பிரகாசமாக காணப்படும்.
தக்காளி சோஸ் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறார்கள் . மிகவும் நல்லக இருக்கும் . எல்லோருக்கும் சிறந்தது .

நாம் அன்றாடம் நமது உணவில் பயன்படுத்தும் தக்காளி விதைகளில் இருதய நாய் பாதிப்பை தடுக்கும் திறன் கொண்டவை என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது. அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்து இமைகளின் மேல் பூசி 2 நிமிடத்தின் பிறகு கழுவவேண்டும். இதை இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தாலே கருவளையம் ஓடிவிடும். முயற்சி செய்து பாருங்கள் . அழகுக்கும் தக்காளி பயன் படுகின்றது .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...