என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

மொச்சைக் காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

உரித்த மொச்சை – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம் (உரித்தது)
வெள்ளைப்பூண்டு – 75 கிராம் (உரித்தது)
தக்காளி – 1 பெரியது
குழம்பு பொடி – 3 (அ) 4 ஸ்பூன்
புளி – எலுமிச்சையளவு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:-
குக்கரில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி, மொச்சைக்காய் போட்டு 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். அதன் பின் குழம்புப் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஒரு சத்தம் வரும் வரை விடவும். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...