என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

நெத்திலி தொக்கு

தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 1/2 கைப்பிடி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய்ப் பால் - அரை கோப்பை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1.முதலில் நெத்திலி மீனை நெத்திலியை முள்ளெடுத்து, 
உப்பு போட்டு நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து வைக்கவும்.
2.வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் 
கொள்ளவும்.
3.அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு 
போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் 
சிவந்ததும் பூண்டை தட்டி போடவும்.
4.பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், 
கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
5.இதனுடன் எல்லா மசாலா தூள் வகைகளையும் சேர்த்து 
இரண்டு நிமிடம் வதக்கி, பின்னர் நறுக்கிய தக்காளி, 
நீளவாக்கில் இரண்டாக நறுக்கிய  பச்சை மிளகாய் சேர்த்து 
மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும்.
6.புளியை கட்டியாக கரைத்து ஊற்றி பச்சை வாடை 
போகும் வரை கொதிக்க விடவும்.
7.இப்போது வடித்து வைத்திருக்கும் நெத்திலி, தேங்காய்ப் 
பாலை சேர்த்து மீண்டும் குறைந்த தீயில் ஐந்து நிமிடம் 
வேக விடவும்.
8.உப்பு அளவு பார்த்து தேவைக்கு சேர்த்து கொள்ளவும்.
9.நெத்திலி கொதித்து கெட்டியானதும், கொத்துமல்லித்தழை 
தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1.நெத்திலியை கழுவும் போது தலை பகுதியை பிடித்து 
கொண்டு விரலால் நடுவில் கீறினால் முள்ளை 
அப்படியே எடுத்து விடலாம்.சாப்பிடும் போது ஒரு 
முள் கூட இருக்காது.

2.நெத்திலியை கழுவும் போது ஒரு பெரிய கண் வடிசட்டியில் 
(புளி வடிகட்டி போல்) வைத்து கழுவினால் கீழே விழாது. 
லேசாக ஜலிப்பது போல கழுவ வேண்டும்.

3.நெத்திலி மீன் சீக்கிரம் வெந்து விடும் ஆகையால் 
கடைசியில் போட வேண்டும்.

4.காரசாரமாக சாப்பிடுபவர்கள் இன்னும் அரை தேக்கரண்டி 
மிள்காய் தூளும், ஒரு பச்சை மிளகாயும் கூட சேர்த்து 
கொள்ளலாம்.
 
5.காஷ்மீரி சில்லி பொடி சேர்த்தால் நல்ல கலராக இருக்கும். 
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...