என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

கோபம் ஏற்பட்டால்?

 கோபம் வந்துச்சுன்னா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்!" இன்றைய தலைமுறையில் நிறையப் பேருக்கு இது தினசரி டயலொக்.
யானைக்கு மதம் பிடிக்கும்போது செய்கின்ற அழிவை, மனிதன் கோபப்படும்போது செய்கிறான். சின்ன கோபம், பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகிறது.
கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்கின்றனர்.
நாம் கோபப்படுவதால் நமது உயிர், நம் முடைய அறிவுக்கு அப்பாற்பட்டு உடலிலிருந்து வெளியேறத் தயாராகிவிடுவதை யாரும் உணர்வதில்லை.

பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி அவர். வயது 50க்குள். எடை 100
கிலோவுக்கு மேல். சதா சர்வ காலமும் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பவர். நல்ல
வேளையாக அவருக்கு நீரிழிவு வரவில்லை. ஆனால், கோபம் அடிக்கடி வந்து இரத்த அழுத்தம் 160/80 என எகிறுகிறது..


அடிக்கடி நெஞ்சு படபடப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்த வர், ஒரு நாள் படபடப்பு அதிகமாகி மருத்துவ மனைக்கு வந்தார், இ.சி.ஜி. பார்த்த போது லேசான மாற்றம் இருந் தது.
ஆஞ்சியோ கிராம் பார்த்ததில், இருதய இத்தக் குழாயில் லேசான அடைப்பு தெரிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மருந்து செலுத்தி, அடை ப்பை
நீக்கிவிட்டார் கள். அவரும் நலம் பெற்றுத் திரும்பினார்.
அவருக்கு இருதயத்தில் பிரச்சினை ஏற்பட காரணம், அவரது வாழ்க்கை முறைதான்.
அடிக்கடி வந்து போகும் கோபம், இனம் புரியாத வருத்தத்தின் வெளிப்பாடுதான்..


நாம் எண்ணியது நடக்காவிட்டால், சொல் வதை யாராவது கேட்காவிட்டால், நமக்குக் கோபம் வருகிறது. கோபம் தற்காலிக உணர்வு தான். ஆனால் அந்த நேரத்தில் செயற்பாடுகளை நாம் உணர்வதில்லை.
அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹோர்மோன் சுரக்கிறது. அதுவே உடலின் இரத்தக் குழாயை சுருக்கிவிடுகிறது. உடலில் இரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக இரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது..


அதிக கோபம் வரும்போது, அதிக மான அளவு இரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய
வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்
போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடுகிறது.
உச்சகட்டமாய் உயிரும் போய் விடுகின்றன.
எது கிடைக்கவில்லை என்று கோபப்படு கிறோமோ, அதனால் ஏற்படும் இழப்பு,
கிடைக்கிறதைவிட அதிக மதிப்புள்ளதாக யிருக்கிறது. கோபத்தைக் குறைக்க என்ன செய்ய லாம்?
தண்ணீர் குடிக்கச் செல்வார்கள். அந்த இடத் தைவிட்டு வெளியேறி,
கூல்டிரிங்ஸ், கோப்பி குடிக்கலாம் என்பார்கள். அதெல்லாம் வேண் டாம்,
கோபத்தை உங்களுக்குப் பிடித்த கட வுளுக்கு காணிக்கையாகப் படைத்துவிடுங்
கள்.
பட்டுப்புடைவை, தங்கமாலை, துலாபாரம், எடைக்கு எடை ஏதாவது ஒன்று என எத்தனை
விதமாக நீங்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்துவீர்களோ, அதேபோல உங்கள்
கோபத்தை ஒரு கற்பனைத் தட்டில் வைத்து கடவுளின் காலடியில் கொட்டி
விடுங்கள்..


கடவுளிடம் கொடுத்ததை நீங்கள் நிச்சயம் திருப்பி வாங்க மாட்டீர்கள். அவரும்
உங்கள் கோபத்தை வாங்கிக் கொண்டு அன்பை உங்களுக்கு வரமாய் அளிப்பார்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...