வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில்
குடிக்க வயிற்று வலி நீங்கும்.
வயிற்றுக்கடுப்பு நீங்க
1. வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க
வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
2. வயிற்றுக்கடுப்பு தோன்றினால் வடித்த கஞ்சியை
சுடச் சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும் .
வயிற்றுப் பூச்சி வெளியேற
மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து
தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.
வயிற்றுப் போக்கு
சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப்
பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை
சாப்பிட்டால் எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும்
நின்றுவிடும்.
தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து
அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி,
வயிற்றுப் போக்கு நிற்கும்.
மலச்சிக்கல் நீங்க:-
1. மலச்சிக்கல் தீர இரவில் மாம்பழம் சாப்பிட வேண்டும்.
2. அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்த
மலச்சிக்கல் நீங்கும்
3. செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும்
இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
அஜீரணம்
1. ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம்,
மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி
குடிக்க அஜீரணம் சரியாகும்.
2. வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும்.
பசியும் எடுக்கும். ஆனால் வெந்நீரில் குளிக்க வேண்டாம்.
நரம்புக் கோளாறுகள் ஏற்படும்! தினமும் வெந்நீரில்
குளிப்பதால் ஆண்மைக்குறைவு ஏற்படும் என்றும் சொல்கின்றனர்!
நாடாப்புழு வெளியேற
கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரைத் தட்டிப்
போட்டு சுண்டக்காய்ச்சி தினமும் 1/2 கப் உட்கொண்டு வர
வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
சீதபேதி
1. கீழாநெல்லி இலைகளைக் கொண்டு வந்து தண்ர்விட்டு,
அடுப்பில் வைத்துக் காய்ச்சி, கசாயம் இறக்கி அந்த
கசாயத்தை ஒரு சிறிய டம்ளரில் அரை டம்ளர் வீதம்
எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம்
மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
2. சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து
கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச்
செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை
வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும்
கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.
3. மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச்
சாப்பிட சீதபேதி குணமாகும்.
No comments:
Post a Comment