1 வியர்க்குரு,தோல் தடிப்பு நீங்க பனை நுங்கு சதையை
வியர்க்குரு உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
2 வியர்வை, பூஞ்சை கிருமியால் ஏற்படும் சொறி,
சிரங்கு,படை நீங்க வேப்பங்கொழுந்து, குப்பைமேனி
இலையை அரைத்து தடவலாம்
3 சந்தனத்தைக் கொண்டு வியர்க்குரு உள்ள இடத்தில்
தேய்க்க பலன் தரும்.
4 நிறைய வியர்க்குரு வந்து அவதிப்படுபவர்கள் சாதம்
வடித்த கஞ்சியை தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிய
பிறகு குளித்தால் வியர்க்குரு மறையும்.
5 வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள்
தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு
முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு
மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.
6 வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின்
சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை
பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும்
ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.
7.சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள்
கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு
இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில்
குணமாகும்.
No comments:
Post a Comment