என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

வாய் சம்மந்தமான நோய்களுக்கு சில ஆலோசனைகள்

வாய்ப்புண் தீர :-
மணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து
வரவும்

நாக்குப்புண் தீர :-
இளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பவும்.

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை
உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் :-
அகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வரவும்

வாய் நாற்றம் அகல:-
நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால்
பேசும் போது வெளிப்படும் வாய் நாற்றம் அகலும்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை
ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து
வந்தால் வாய் நாற்றம் போகும்.

எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து
காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல்
நிற்கும்.

பல்லில் பூச்சிகள் 
சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின்
எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

வெண்மையான பற்களைப் பெற...
வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும்
சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப்
போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க
வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத்
தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும்
ஈறுகளும் வலுவடையும்.

வலுவான பற்கள்
வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல
ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி,
பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு
சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும்
சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு
உறுதியாக இருக்கும்.

பித்தம் தணிய
கறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம்
தணியும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி,
அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி
வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...