என்னை தொடர்பவர்கள்

எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)

Custom Search

உடல் குண்டாக வேண்டுமா?




*சோயா, இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி,போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும் 

*பேரிச்சம் பழம், தேன் இவற்றோடு கற்கண்டும் சேர்த்து லேகியப்பதமாகச் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வரஉடல் எடையை அதிகரிக்கும் .
*ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம் பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றை யும் தினமு ம் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு குண்டாக தொடங்கும்  
*சோற்றுக் கற்றாழையை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சதைப் பகுதியை நன்கு நீர் விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்  உடல் தேறும்.
*பச்சை பயறை நீரில் ஊறவைத்து முளை கட்டிய பின் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும். கொண்டைக் கடலை 10 எடுத்து இரவு சுத்தமான நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைபயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து வந்தால் மெலிந்த உடல் தேறும். சோர்வு நீங்கும்.

*பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கட லை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதி கம் நிறைந்துள்ளது. ஆகவே இத ற்கான டயட் இருக்கும்போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டு ம். இவை அனைத்துமே ஆரோக் கிய மான கொழுப்புகள் தான்.
மேலும் உடல் எடையை அதிகரி க்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரு ம் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழ ங்களை சாப்பிடுவதும், உடல் எடை யை அதிகரிக்கச் செய்யும் உணவுக ள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக் லேட்டில்கூட அதிக கலோரிகள் நி றைந்துள்ளன.

*முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் கை கால் உடல் அசதி நீங்கும். உடல் பலம் பெறும். உடலைத் தேற்ற சிறந்த டானிக் இது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...