என்னை தொடர்பவர்கள்
எல்லா நாடுகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பை நேரடியாக காண்பதுக்கு.( ஆயிரத்துக்கு மேற்பட்ட சனல்கள்)
Custom Search
கர்ப்ப காலத்தில் ,அதற்கு பின்னும்
1கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண்,உதட்டை,கழுத்து சுற்றிலும் கருமை படர்ந்து கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது.குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருப்பினும் சிலருக்கு கருமை நிறம் தங்கிவிடும். இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதைதேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும்.
2எந்த ஒரு மசாஜ் செய்யும் போதும் சூடான அல்லது வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அந்த எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால் மிகவும் நல்லது. ஆகவே மசாஜை வீட்டில் செய்து உடலை ஆரோக்கியமாக, பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்
3கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முகம்,கை,கால்,வறண்டு காணப்படும் இதற்கு 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதனை கொஞ்சம்,கொஞ்சமாக வறண்ட இடத்தில் பூசி 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்தால் நாடளவில் வறட்சி மறைந்து பொலிவடைய தொடங்கும்
4கர்ப்பகால தழும்புகளை போக்க ஆவகேடோ எண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து கருமை , வரி உள்ள இடங்களிலும் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒரு மாதம் தொடர்ந்து இதுபோல் செய்து வரலாம். பிரசவ கால தழும்புகள்
மறையும்
5அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
Posted by
suba
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment